5ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்த்…!

புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட தமிழக அரசின் 5ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படமும், அவர் குறித்த செய்தியும் வெளியாகி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல், நிர்வாகம், கலை, விளையாட்டு துறைகளில் சாதித்தவர்கள் பற்றிய தகவல்கள், தமிழக பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், வாழ்க்கையில் ஏழ்மை நிலையில் இருந்து தனது கடின முயற்சியால் உயர்ந்தவர்கள் பற்றிய ‘Rags to Riches Stories’ என்ற பாடத்தில் ‘பேருந்து நடத்துனராக இருந்து திரைத்துறையில் அறிமுகமாகி சூப்பர் ஸ்டாராகவும், கலாச்சார அடையாளமாகவும் ரஜினிகாந்த் திகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்தியச்செய்திகள்