முற்றுகின்றது கொழும்பு முரண்பாடு?

கொழும்பில் மீண்டும் மைத்திரி –ரணிலிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இலங்கை ஜனாதிபதியின் அதிரடி தீர்மானத்தால், இன்றைய அமைச்சரவைக் கூட்டம்  இடம்பெற்றிருக்கவில்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தினால் மாத்திரமே, அமைச்சரவையை கூட்டுவதாக ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.
எனினும், ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி, இன்று தெரிவுக்குழு அமர்வு இடம்பெறுவதனால், இன்றைய அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவில்லை.
முன்னதாக ரணில் முன்னெடுத்த சமாதான முயற்சியும் தோல்வியிலேயே முடிவடை
தெரிவுக் குழு அமர்வு இன்று 2.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Allgemein