கழிவறைக் கதவென அவசரகால கதவைத் திறந்த பயணி; வானூர்தியில் பரபரப்பால் தரையிறக்கம்;

பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு செல்ல பாகிஸ்தான்  ஏர்லைன்ஸ் வானூர்தி புறப்படத் தயாராகி, ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்த போது, பெண் பயணி ஒருவர் கழிவறைக் கதவு என்று நினைத்து வானூர்தியின் அவசரகால வழியை திறந்துவிட்டார்.

அதனால், பயணிகள் வெளியேறுவதற்கான சறுக்கு மிதவை விரிந்தது. வானூர்தி ஊழியர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திடீரென அவசரகால வழி திறந்ததால் பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

உலகச்செய்திகள்