விகாரை கட்டியபின் நீராவியடியில் கட்டுமானத்தடையாம்?

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சைக்குரிய காணியில் எந்தவொரு தரப்பும் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி எந்தவித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாதென இலங்கை அமைச்சர் மனோகணேசன் அறிவித்துள்ளார்.
நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக முல்லை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடளின் பின் தனது முடிவாக அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
அதேவேளை பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியுடன் எந்தவொரு தரப்பும் கட்டுமான பணிகள் செய்ய முடியும்.இதுவே நீதிமன்ற தீர்ப்பு. இந்த தீர்ப்பில் திருப்தில்லாத விகாரையின் பௌத்த தேரர் அவசியமானால் மேன்முறையீடு செய்யலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி இனி கட்டுமான பணிகள் செய்ய முடியாதெனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதனை முல்லைத்தீவு பிரதி காவல்துறை அதிபர் மஹிந்த குணரட்ன, காவல்துறை அத்தியட்சகர் சேனாநாயக்க மற்றும் முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரி கங்கநாத் ஆகியோர் கண்காணிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்;
இக்கூட்டத்தில் எம்பிகள் சிவசக்தி ஆனந்தன், சார்லஸ் நிர்மலநாதன், ஸ்ரீதரன், வேலுகுமார், மாவட்ட செயலாளர் ரூபவதி, ஜமமு அமைப்பு செயலாளர் ஜனகன், பிரசார செயலாளர் பரணிதரன், நிர்வாக செயலாளர் பிரியாணி, சர்ச்சைக்குரிய தேரர், நீராவியடி பிள்ளையார் ஆலய தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாயகச்செய்திகள்