தென்மராட்சியில் பெற்றோல் குண்டு தாக்குதல்

 

தென்மராட்சி கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளை ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாவற்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள குறித்த சங்கத்தின் மீது இனம் தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று பெற்றோல் குண்டினை வீசியுள்ளனர்.

அதனால் அச்சமடைந்த காவலாளி அது தொடர்பில் சாவகச்சேரி காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர். சங்கம் மூடப்பட்டு இருந்தமையால் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்