சீறி எழுகிறது ரணில் ஆதரவு பினாமி அமைப்பு?

கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் விதம் தொடர்பில் கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாக சிவில் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்துக்குள் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சிவில் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னப்பிரிய இன்று(09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அறிவித்துள்ளார்.
கடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கையில் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது தொடர்பில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் தாம் கவலையடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தெரிவுக்குழுவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவிடமும் வேண்டுகோள் விடுப்பதாகவும் சமன் ரத்னப்பிரிய மேலும் குறிப்பிட்டார்.
Allgemein