கொக்குதொடுவாய் ஆமையன் குளம் சிங்கள குளமானது?

நல்லாட்சி அரசென கூட்டமைப்பினரது பிரச்சாரத்துடன் கொண்டுவரப்பட்ட இலங்கை ஜனாதிபதி மைத்திரி தனது முல்லைதீவு விஜயத்தின் போது தமிழ் மக்களிற்கு சொந்தமான குளமொன்றை சிங்கள குடியேற்றவாசிகளிற்காக முழுமையாக தாரைவார்த்துக்கொடுத்துள்ளார்.
கொக்குத்தொடுவாயிலுள்ள ஆமையன்குளத்தை பெயர் மாற்றி வெலிஓயாவென நாமம் சூட்டப்பட்டுள்ள சிங்கள குடியேற்ற  திட்டத்தில் குடியமர்ததப்பட்டுள்ள சிங்களவர்களிற்கு தாரைவார்த்துக்கொடுத்துள்ளார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் தயா கமகே, காமினி ஜயவிக்ரம பெரேரா, கயந்த கருணாதிலக்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், எஸ். சிவமோகன் மற்றும் காதர் மஸ்தான்,  உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனெவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், முப்படை மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர்.
முன்னதாக பல மில்லியன் செலவினில் புனரமைக்கப்பட்ட குளத்தின் திறப்புவிழாவிற்கு மைத்திரி வருகை தருவாரென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தமை குறிப்பிடடத்தக்கது.
தாயகச்செய்திகள்