ஈழத் தமிழ் பாடகி மாயா(MIA) மகாராணியின் பிறந்த நாளில் பாடி கெளரவிக்கிறார்!

ஈழத்தை பிறப்பிடமாகக் கொண்ட மாயா அருள்பிரகாசத்தை சுருக்கமாக என்று அழைப்பார்கள். பிரித்தானியாவில் மட்டுமல்லாது, இவர் அமெரிக்காவிலும் பிரபல்யமான பாப் இசைப் பாடகியாக வலம் வருகிறார். இன் நிலையில், பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்களின் 93வது பிறந்த தினம், நேற்றைய தினம்(சனிக்கிழமை) மிக கோலாகலமாக கொண்டாப்பட்டது. இதில் மாயாவுற்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மகாராணியாரின் இந்த அழைப்பு மிக மிக பெருமை மிக்க விடையம் ஒன்றாகும்.

அதுவும் ஒரு சாதனை படைத்த ஈழத்து தமிழ் பெண்ணுக்கு இவ்வாறு அழைப்பு வருவது, தமிழர்களை பெருமை கொள்ள வைக்கிறது. மாயாவின் தந்தை ஈரோஸ் அமைப்பில் இருந்து பின்னர் விடுதலைப் புலிகளோடு அவ்வமைப்பு இணைந்தவேளை அவர்களோடு நின்று பணியாற்றியவர் என்பதும். ஈழத் தமிழர்களுக்கு தனி ஈழமே ஒரு தீர்வை பெற்றுத்தரும் என்பதிலும் அவர் இன்றுவரை உறுதியாக இருக்கிறார். பல சர்வதேச தொலைக்காட்சிகளில் தோன்றி பேட்டி வழங்கியுள்ள மாயா, இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று நேரடியாக நிகழ்ச்சியில் கூறி, பல சர்சைகளில் சிக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

உலகச்செய்திகள்