ரதனின் இரட்டை கோல்கள் கை கொடுக்க ஷாம்பியனானது கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி..!!

கம்பர்மலை கலாவாணி வைர விழா நிகழ்வின் வடமராட்சிக்குட்பட்ட 16அணிகள் பங்குபற்றிய போட்டியின் இன்றைய(09/06/2019) மின்னொளியிலான 07நபர் கொண்ட உதைப்பந்தாட்ட இறுதி போட்டியில் மோதியது இமையாணன் மத்தி எதிர் யங்கம்பன்ஸ் அணி.

போட்டியின் முழு நேர ஆட்ட இறுதியில் 03:02என்ற கோல் கணக்கில் இமையாணன் மத்தி அணியை வீழ்த்தி ஷாம்பியனானது கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணி.

யங்கம்பன்ஸ் அணி சார்பாக கோல் போட்ட வீரர்கள் விபரம்
ரதன் -02
தர்ஷன்-01

இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்ட இமையாணன் மத்தி அணிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
கம்பர்மலை கம்பா்மலை செய்திகள்

விளையாட்டுச்செய்திகள்