பாரிய விபத்து இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி!

சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 இந்தியர்கள் உட்பட 17 பேர்  பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
துபாயில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே நேற்று மாலை 5.40 மணியளவில் சுற்றுலா பேருந்து ஒன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பயணித்த பேருந்து  சாலைத் தடுப்பு மற்றும் விளம்பரப் பலகை மீது பலமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
இதில் 8 இந்தியர்கள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் ராஜகோபாலன், பெரோஷ் கான் பதான், ரேஷ்மா பெரோஷ்கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன், அரக்கவீடில், கிரண் ஜானி, வாசுதேவ், திலகராம் ஜவஹர் தாக்கூர் ஆகியோர் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
உலகச்செய்திகள்