முன்னைாள் போராளிகளான மாற்று திறனாளிகள் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் உடன் விசேட சந்திப்பு!!?

இன்றைய தினம் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம்பெற்றது.

இச் சந்திப்பில் புதிய வாழ்வு இல்லத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள்  மற்றும் மக்கள் நலன் காப்பக பணியாளர்கள் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் இணைந்து நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் அவர்களை நேரில் சென்று சந்தித்தார்கள். தமக்க ஏற்ப்பட்டுள்ள  பிரச்சினைகள் குறித்தும் தமது புதிய வாழ்வு இல்லத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.என தமிழ் அருள் யாழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது புதிய வாழ்வு இல்லத்தில் முன்னாள் பெண்கள் போராளிகளின் பராமரிப்பு பகுதியை அங்குரார்ப்பணம் செய்வதற்காக சி.வி.விக்னேஸ்வரன் ஜயா அவர்களை அழைப்பு விடுத்திருந்தனர் .

அவர்களின் அழைப்பை ஏற்றுக்கொண்ட சி.வி.விக்னேஸ்வரன் ஜயா அவர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதாகவும் பெண்கள் போராளிகளின் பராமரிப்பு, முன்னாள் போராளிகளான மாற்று திறனாளிகள் மறுவாழ்வு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க உதவிகளை மேற்கொள்வதாகவும் உத்தரவை முன்னாள் மாற்று திறனாளிகளான போராளிகளிடம் தெரிவித்துள்ளார்.மேமலும் இவர்களது  விடயத்தில் கரிசனை கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

தாயகச்செய்திகள்