மஹிந்தவுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிட கோரிக்கை

இலங்கையில் தேர்தல் அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கும் கடிதமொன்று அவரிடமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று (06) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை ஜனாதிபதியிடமே அது கையளிக்கப்பட்டது.
நேற்றைய தினம் அடுத்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென மைத்திரி தெரிவித்ததுடன் மஹிந்த தரப்புடன் கூட்டுச்சேரப்போவதில்லையெனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மீள மைத்திரியினை மஹிந்தவுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Allgemein