கொலையாளிகளை காப்பாற்ற முற்பட்ட மைத்திரி!

அப்பாவி தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த குற்றவாளிகளை காப்பற்ற மைத்திரி முற்பட்டமை அம்பலமாகியுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து, 11 இளைஞர்கள் கடத்திக் காணாமலாக்கப்பட்ட விவகாரத்தை விசாரித்த குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான  நிசாந்த சில்வாவை இடமாற்றம் செய்யுமாறு, மைத்திரிபால சிறிசேன அழுத்தம் கொடுத்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னால் முன்னிலையாயுள்ள நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிலையிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரியான  நிசாந்த சில்வாவை இடமாற்ற மேற்கொள்ளப்பட்ட சதிகளின் பின்னால் மைத்திரி இருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது.
Allgemein