முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும்! மங்கள கடும் சீற்றம்

அமைச்சர்களான ராஜித, மங்கள மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஆகியோர் விகாரைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என கம்பஹா மாவட்ட பௌத்த சங்க சபை தீர்மானம் எடுத்துள்ள நிலையில் அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.“தம்மை கொல்ல வந்த தேவதத்தருக்கு கூட விகாரையை தடை செய்யவில்லை புத்த பெருமான்.

அந்த உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும். கவலையில் இருந்து நீங்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இதை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein