கிழக்கு ஆளுநராக சான் விஜேயலால் டி சில்வா!

கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநராக, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சான் விஜேயலால் டி சில்வா இன்று (05) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்ததன் பின்னர் ஏற்பட்டுள்ள இடைவெளிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரான சான் விஜேயலால் டி சில்வா, தொடர்ந்தேர்ச்சியாக மூன்று தடவைகள் தென் மாகாணத்தின் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Allgemein