கனடாவில் உள்ள நாடு கடந்த தமிழீழ அரசின் பொன்.சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு அஞ்சலி!

அலுவலகத்தில் ஈழவிடுதலைப் போரட்டத்தின் முதலாவது தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு அஞ்சலி அனுஸ்டிக்கப்பெற்றது…………………………….

ஈழவிடுதலைப் போரட்டத்தின் முதலாவது தற்கொடையாளர் பொன்.சிவகுமாரனின் 45 வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசின் அலுவலகத்தில் ஜூன் ஐந்தாம் நாள் நடைபெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் அதிகாரியுமான ஈழவேந்தன்,கலாநிதி ஸ்ரீபவன் ஸ்ரீஸ்கந்தராஜா,மருத்துவர் போல் ஜோசேப் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.சிவகுமாரன் விடுதலை உன்னத இலட்சியத்திற்காக உண்மையான தொலைநோக்குடன் தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்டபோது உயிருடன் பிடிபடக்கூடாது என்று சயனய்ட் அருந்தி தமிழ் ஈழ விடுதலை போரட்டத்தின் முதற் தற்கொடையாளராய் 1974 ஜூன் 5ம் நாள் வீரச்சாவை தழுவிக்கொண்ட நினைவுகள் நிகழ்வில் நினைவுகூரப்பட்டது.

தாயகச்செய்திகள்