ஸ்தம்பிதமடைந்த நீர்கொழும்பு! முடங்கின போக்குவரத்து!

 

நீர்கொழும்பிலிருந்து வெளியிடங்கள் மற்றும் உள்ளூர் சேவைகளில் ஈடுபடும் அனைத்து தனியார் பஸ்களும் முழுமையான வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.

நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அத்துரலிய ரத்தன தேரரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து சேவைகள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருப்பதால் நீர்கொழும்பு நகரில் இருந்து பயணங்களை மேற்கொள்ளவுள்ள பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Allgemein