சிறிதரனைச் சந்தித்த டேவிட் மக்கினன்

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மக்கினன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

சமகாலத்தில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தமிழர்களின் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் அசமந்தப்போக்கு என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏப்ரல் 21க்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்