அடாத்துக்களும் தமிழர் ஆலயங்களை அபகரிக்கும் அரசும் ஆமித்துறுக்களும்

 
பிள்ளையார் ஆலய வளகாம் தங்களுக்கு சொந்தமென பௌத்த துறவிகள் சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு நீராவியடிப்பகுதியில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வளாகத்தில் சட்டத்திற்கு முரணான வகையில் பௌத்த விகாரை அமைத்து முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்சையினை ஏற்படுத்தியுள்ள பிரச்சனை தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில்.
இன்று 05.06.19 கொக்குளாய் மற்றும் வெலிஓயா பகுதியினை சேர்ந்த சிங்கள மக்கள் பௌத்த துறவிகள் இணைந்து அமைதிவளியிலான ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த பௌத்த விகாரை அமைந்துள்ள பகுதி காலங்காலமாக பௌத்த மதத்தின் பூர்வீகம் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வழிபட்டு வந்த நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் அத்துமீறும் பௌத்த துறவியின் செயற்பாட்டால் செம்மலை பிரதேச மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள விடாது இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு வழங்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் எட்டாம் திகதி ஜனாதிபதி அவர்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் சிங்கள மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
Allgemein