நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்ற உள்ள மகிந்த!

இன்று பிற்பகல் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற உள்ளது.

குறித்த கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற உள்ளது.

இந் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ இதன்போது நாடாளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் அடுத்துவரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein