இந்திய அரசியல் சட்டத்தையே கொழுத்தியவர்கள் நாங்கள்; எங்ககிட்டேவா, ஆவேசப்பட்ட வைகோ!

தமிழக மக்களைக் காக்க எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயார் என வைகோ ஆவேசமாக பேசியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டணி வெற்றி விழா நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில்,

மேலும் பேசுகையில் மும்மொழிக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கையின் குறிப்பிட்ட பகுதியைத் தீயிட்டு கொளுத்த வேண்டுமா? தயாரா? தயாரா? தெருவுக்குத் தெரு தீயிட்டுக் கொளுத்துவோம். மொழிப்போர் தியாகிகள் எதற்காக மடிந்தார்களோ, இந்திய ராணுவத்தின் முன் எதற்காக மார்பைக் காட்டி மடிந்தார்களோ அந்தத் தியாகம் வீண் போகாது என்று பேசிய அவர்,

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து. ஸ்டெர்லைட் அனில் அகர்வாலுக்குத்தான் 272 கிணறுகள். நம்மை அழிக்கத் திட்டமிட்டுவிட்டார்கள்.

இந்திய அரசியல் சட்டத்துக்கு தீயிட்டவர்கள் நாங்கள். அரசியல் சட்டத்துக்கு தீயிட்ட இயக்கம் திமுக. அரசாங்க உத்தரவை வீதிக்கு வீதி, நாற்சந்தி முனையிலே தீயிட்டுக் கொளுத்துவோம்” என்று ஆவேசமாக பேசினார் வைகோ.

இந்தியச்செய்திகள்