ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ராஜினாமா?

இலங்கை முஸ்லீம் சமூகம் சிங்கள பேரினவாதத்திற்கு தமது விசுவாசத்தை பல வடிவங்களில் வெளிப்படுத்திவருகின்ற போதும் அது விட்டபாடாகவில்லை.

இதன் தொடர்ச்சியாக ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக ரணில் மற்றும் மைத்திரி கோரியுள்ளதால் இன்று அவர்களது ராஜினாமா கடிதங்கள் கையளிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏந்நேரமும் அவர்கள் தமது ராஜினாமா கடிதங்களை கையளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கொழும்பு அரசியல் பரபரப்பாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகை முன்னால் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் இனக்கலவரமாக பரிணமிக்கலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் சியாக ரிசாட், அசாட் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக ரணில் மற்றும் மைத்திரி கோரியுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே நேற்றைய தினமும் யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியும்  நாவலர் வீதியும் இணையும் புதுப்பள்ளிச் சந்தியில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை ஆராதனையின் பின்னர் யாழ் முஸ்லீம் சமூகத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டமானது, யாழ் முஸ்லிம் சமூகத்தினால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஏப்ரல் 21 தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டும், குறித்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம் குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் அரசை சட்டத்தின் மூலம் தண்டணையை வழங்கக் கோரியுமே, முன்னெடுக்கப்பட்டது.
தாயகச்செய்திகள்