புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட்ட முஸ்லீம் கைது!

இலங்கை இராணுவத புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட்ட முஸ்லீம் நபரொருவர் கைதாகியுள்ளார்.இவர் இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுர பகுதியில்  இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவ அதிகாரி போன்று உடையணிந்து செயற்பட்டு வந்த முஹம்மட் நிசார் இம்ரான் எனும் சந்தேகநபரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென தெரிவிக்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் இலங்கை இராணுவத புலனாய்வு பிரிவுடன் இணைந்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தமிழர்களை வேட்டையாடுவதில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாயகச்செய்திகள்