நாட்டிற்கு மிகப் பெரும் ஆபத்து!

நாட்டிற்கு மிகப் பெரும் ஆபத்து!

இலங்கையில் காணப்படும் இதே நிலையானது தொடர்ந்தும் நீடிக்குமாயின் பெரும் குழப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் கணப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக அதன் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் கடும் குழப்பங்கள் தோன்றக்கூடிய சாத்தியம் எழுந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மேற்படி நபர்களை பதவி நீக்கம் செய்யவேண்டுமென்று கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கண்டி தலதா மாளிகையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein