திடீரென வானில் தோன்றிய மர்ம ஒளி: ஏலியன்களா,

சுவிட்சர்லாந்தில் திடீரென வானில் தோன்றிய ஒளியைக் கண்ட மக்கள் அவை ஏலியன்களாக இருக்கலாமோ என்று எண்ண, பின்னர் அவை செயற்கைகோள்கள் என்ற உண்மை தெரியவர, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

நேற்று உலகின் பல பகுதிகளிலும் வானில் வித்தியாசமான ஒளியைக் கண்ட மக்கள் குழப்பம் அடைந்தனர்.

அதேபோல் சுவிஸ் மக்களும் முதலில் குழப்பம் அடைந்தாலும் பின்னர் அவை எலன் மஸ்க் வானில் அனுப்பிய செயற்கைகோள்கள் என்பதை அறிந்து கொண்டனர்.

வானத்தில் கார் விட்ட தொழில்நுட்ப வல்லுநர் எலன் மஸ்கின் வேலைதான் அது என்பது தெரியவந்ததும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததோடு, பொலிசாருக்கும் தகவல் அளித்தனர் மக்கள்.

ஏற்கனவே விண்கற்கள் பூமியை தாக்கும் என்ற செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டிருக்க, மக்களுக்கு தாங்கள் கண்ட காட்சிகள் விண்கற்களாக இருக்குமோ என்ற எண்ணமும் ஏற்பட்டது.

எலன் மஸ்க் உலகெங்கிலும் இன்னமும் இணையத்தை அணுக இயலாத நிலையிலிருக்கும் மக்களுக்கு இணைய வசதியை ஏற்படுத்துவதற்காக செயற்கை கோள்களை அனுப்பி வருகிறார்

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக 60 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. எலன் மஸ்கின் கனவு நிறைவேற இன்னும் பல ஆயிரம் செயற்கை கோள்களை அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்