ஐநாவில் முக்கிய பொறுப்பு இந்திய பெண்மணிக்கு!

ஐக்கியநாடுகள் சபையின் ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா பாட்டியாவை பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நியமித்துள்ளார்.

கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ள அனிதா, அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழத்தில் பட்ட மேற்படிப்பையும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் சட்டப் பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றவர் ஆவார்.

ஐ.நா. நியமனத்துக்கு முன்னதாக, உலக வங்கியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடுகளிடையேயான உறவுகள், வள ஆதாரங்களைப் பகிர்தல் ஆகிய துறைகளில் அனிதா பாட்டியா திறமையாக செயட்பட்டுள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

உலகச்செய்திகள்