இரண்டு மாதங்களுக்குள் பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்

 

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் இரண்டு மாதங்களுக்கிடையில் ஆரம்பிக்கப்படும் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின்  உதவித் தலைவர் பிரியந்த காரியப்பெரும தெரிவித்தார்.

“தற்போது இராணுவ விமான தளமாகப் பயன்படுத்தப்படும், பலாலி விமான நிலையம், 20 பில்லியன் ரூபா செலவில், பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது.

திட்டத்துக்கான வழங்குனர்கள் தீர்மானிக்கப்பட்டதும், பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

சில வாரங்களுக்கு முன்னர், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், நீர்வழங்கல், வடிகாலவமைப்பு சபை, ஆகியவற்றின் 60 அதிகாரிகளைக் கொண்ட குழு பலாலி விமான நிலையத்தில் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டிருந்தது.

இதையடுத்து, ஏ 320 விமானங்கள் தரையிறங்கக்க கூடிய வகையில், பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை 3500 மீற்றர் வரை  வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலம், விரிவாக்கம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாயகச்செய்திகள்