திருச்சொரூப பவனி இம்முறை இல்லை!

தற்கொலைதாரியின் தாக்குதலிற்குள்ளான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருச்சொரூப பவனி இம்முறை இடம்பெறாதென, தேவாலயத்தின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் கடுமையான சேதங்களுக்கு உள்ளான தேவாலயத்தின் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஜூன் 12 ஆம் திகதி மாலை 5 மணிக்கு, தேவாலயம் மீளவும் திறக்கப்படும். மறுநாள் (13) காலை 10 மணிக்கு, விசேட நற்கருணை ஆராதனையை பேராயர் மெல்கம் ரஞ்சிம் ஆண்டகை ஒப்புக்கொடுப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Allgemein