வழமைக்கு திரும்புகின்றதா இலங்கை!

தெற்கு குண்டுவெடிப்புக்களையடுத்து நிறுத்தப்பட்டிருந்த சேவைகளை இலங்கை அரசு படிப்படியாக மீள வழங்க நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது.
இதன் பிரகாரம் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பொதிகளை கொண்டு செல்லும் நடவடிக்கையானது, எதிர்வரும் சனிக்கிழமை முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதென, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதிகளை பொறுப்பேற்கும் ரயில் நிலையங்களில் பொதிகளை சோதனையிடுவதற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே யாழ்.கொழும்புத்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து 7 கைக்குண்டுகள் இன்று (30) மீட்கப்பட்டுள்ளன.
Allgemein