இரவோடு இரவாக வவுனியாவில் குடியமர்த்தப்பட்ட வெளிநாட்டு அகதிகள்!

 

இலங்கைக்கு சென்றுள்ள அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை சென்ற அகதிகளே இவ்வாறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திற்கு நேற்று இரவு 12 மணியளவில் 77 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திலிருந்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்டமாக குறித்த அகதிகள் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Allgemein