அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்கு?

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பொய்த் தகவல்களை வழங்கியமை தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம் இன்று இதனை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணையை திசை திருப்ப முற்பட்டதாக ரணில் தரப்பு மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டள்ள நிலையில் தற்போது விவகாரம் நீதிமன்ற படியேறியுள்ளது.
முன்னதாக இதே குற்றச்சாட்டில் தனது அமைச்சு பதவியை ரவி கருணாநாயக்க இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Allgemein