வவுனியா வளைவு ராணுவ வளையத்துக்குள்!

தெற்கிலிருந்து  கண்டி வீதிவழியாக வவுனியாவிற்குள் வருபவர்களை வரவேற்கும் முகமாக  மூன்று முறிப்புப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வவுனியா உங்களை  வரவேற்கின்றது என்ற வளைவை ஸ்ரீலங்கா ராணுவம் தம்வசப்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்டு, சிங்கள படையினரின் எண்ணங்களை பிரதிபலிக்கும் முகமாக தனிச்சிங்கள மொழியில் எழுதப்பட்டு புது வளைவு ஒன்றை நிரந்தரமாக அமைத்துள்ளனர்.

கம்பிகள் கொண்டு நிரந்தரமாக  அமைக்கப்பட்ட வளைவில்  ஸ்ரீலங்கா ராணுவத்தை பிரதிபலிக்கும் வகையில் படங்களுடன்“ ஊருக்குள் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவோம்“ என்று தனிச்சிங்களத்தில் மட்டும் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Allgemein