வன்முறை இஸ்லாம் மதத்தை தழுவியது அல்ல:சுரேன்!


பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் துருக்கி அரசு தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை அந்நாடு மறுதலித்துள்ளது.துருக்கியலிருந்து இலங்கைக்கு நிதி வருவதாகவும் ஊடகவியலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கி பிழையான கருத்துக்களை வழங்க தூண்டுவதாகவும், ஞானசார தேரர் குற்றம் சாட்டியிருந்தார்.

எனினும் இதனை முற்றாக மறுத்துள்ள துருக்கி தூதரகம் இலங்கையுடன் துருக்கி 2004ம் ஆண்டு முதல் மிகவும் நெருக்கமான உறவை பேணி வருவதாகவும் மனிதாபிமான முறையிலும் தொழில்நுட்பரீதியாகவும் பல உதவிகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளை இலங்கையோடு மிகவும் நெருக்கமாக செயற்படும் துருக்கி எந்தவொரு தீவிரவாதத்திற்கு எதிராகவும் தனது ஒத்துழைப்பை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே மதத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கம், மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள இந்த மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்; தெரிவித்துள்ளார்.

வன்முறை இஸ்லாம் மதத்தை தழுவியது அல்ல என்ற ஒரு சொல்லை ஒரு குடும்பமாக சொல்லவேண்டும். அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக மதத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கம், மார்க்கத்தின் மீது ஏற்பட்டுள்ள மாசு உங்கள் கைகளால் துடைக்கப்படவேண்டும். அது ஒவ்வொரு இலங்கை இஸ்லாமியருடைய ஆறாவது கடமையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகின்றேன் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Allgemein