பேசுவதற்கு தடையாம்!

சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் நிருவாக சபைகள் தொழில்நுட்பத் தகவல்கள் தவிர ஏனைய எந்த தகவல்கள் குறித்தும் பகிரங்க அறிவிப்புக்கள் செய்வதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் செயலாளருடைய அனுமதியைப் பெற வேண்டும் என சுற்றுநிருபம் மூலம் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் லால் பனாபிடிய, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள சகல வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றுக்கு இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
குறிப்பாக வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் ஊடக சந்திப்புக்களை நடாத்துவதாயின் அமைச்சின் செயலாளருடைய அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அந்த சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பதில் ஆணையாளர் நாயகம் மேலும் அந்த சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உலகச்செய்திகள்