கரம் கொடுத்த தென்னிந்தியாவை கைகழுவும் ராகுல்!

இந்திய  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் நாடு தழுவிய படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதாக காங்கிரஸ் காரிய கமிட்டியில் தெரிவித்தார்.எனினும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலா இந்த செய்தியை மறுத்திருந்த நிலையில்

மாநில தலைவர்கள் இடத்தில் பேசிய ராகுல் காந்தி தனது முடிவில் பின்வாங்க மறுத்துவிட்டார்.

எனவே தங்கள் குடும்பத்துக்குள் அல்லாமல் வெளியில் இருந்து தலைவரை தெரிவு செய்யும் நோக்கில்  வெற்றிவாய்ப்பை அதிகம் கொடுத்த தென்னிந்தியாவில் இருந்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் போது,

நேரு குடும்பத்தின் நீண்ட கால விசுவாசியும் பேச்சாற்றல் உடையவருமான அமரீந்தர் சிங் என்ற பஞ்சாப் மாநில காங்கிரஸ் முக்கிய உறுப்பினரை  காங்கிரஸ் தலைவராக ஆக்கலாம் என்று ராகுல் காந்திக்கு  திடடம் இருப்பதக்க டெல்லி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியச்செய்திகள்