தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை தொடரவேண்டுமா? மத்திய அரசு தீர்ப்பாயம் அமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை அண்மையில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக இந்திய மத்திய அரசு , உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல தலைமையில் தீர்ப்பாயம் ஒன்றினை அமைத்துள்ளது.

1991-ம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ததுடன் இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை தொடர்வதற்கு போதுமான காரணங்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி தீர்மானிக்க மத்திய உள்துறை அமைச்சகத்தினால் குறித்த தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியச்செய்திகள்