சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதாக வெளியாகிய தகவல்களை அடுத்து, சிறிலங்கா கடற்படை வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
15 ஐஎஸ் தீவிரவாதிகள் சிறிலங்காவில இருந்து படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கி பயணிப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவல்களை அடுத்து, இந்தியாவின் கேரள மாநில கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியானதை அடுத்து சிறிலங்கா கடற்படை மேலதிக போர்க்கப்பல்களை அனுப்பி வைத்திருக்கிறது.
“இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டவை அல்ல. இதுபற்றிய எந்த புலனாய்வு எச்சரிக்கைகளும் சிறிலங்கா கடற்படைக்கு கிடைக்கவில்லை. இந்தியா அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
அத்துடன், வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விழிப்பு நிலையில் கடற்படையினர் உள்ளனர்.” என்று சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.