பெரு நாட்டை உலுக்கிய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!! அலறியடித்து வெளியேறிய மக்கள்

தென் அமெரிக்க நாடான பெருவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவென கூறப்படுகிறது.

ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் பதிவான இந்த நிலநடுக்கமானது பிராந்திய தலைநகரான மொயொபம்பாவின் கிழக்கே 180 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பலமாக குலுங்கியதாகவும், இது 9-வது மாடியில் இருந்தவர்களுக்கு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அண்டை நாடான ஈக்வடாரில் பதிவானதாகவும், அங்குள்ள கட்டிடங்கள் பல அதிர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

உடல் நலம்