பிரான்ஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் மூவருக்கு மரணதண்டனை!

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து பல்வேறு படுகொலைகளுடன் தொடர்புடைய  பிரான்ஸ் நாட்டினர் 3 பேருக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

அமெரிக்காவின் உதவியுடன் சிரியா தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் 12 பேர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எதிராக பாக்தாத் நகரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கெவின் கோனோட், லியோனார்ட் லோபெஸ், சலிம் மச்சாவ் ஆகிய மூவருக்கு மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

உலகச்செய்திகள்