இந்தியக் குழு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி!

தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவிற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களுக்கு சென்றுள்ளார்கள்.
தமிழகத்தில் இருந்து வருகை தந்த இந்து மக்கள் கட்சி மற்றும் பாராதீய ஜனதாக கட்சி நிர்வாகிகள் யாழ்ப்பாணம் சங்கிலி மன்னன் விழாக்குழு விடுத்த அழைப்பின் பெயரில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டு 26.05.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு பல இடங்களை பார்வையிட்டுள்ளார்கள்.
பாராதீய ஜனதா கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களான அருண்உபாதெயாய,தீட்சாக்கௌசிக்,தமிழக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத்,மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏழுபேர் பயணம் மேற்கொண்டுள்ளார்கள் நேற்று (26) மாலை இறுதிப்போரில் உயிரிழந்த மக்கள் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு சென்று போரில் உயிரிழந்த மக்களுக்காக வணக்கம் செலுத்தியுள்ளதுடன் வரலாற்று சிற்ப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
தாயகச்செய்திகள்