மைத்திரிக்கு நேரமில்லை:வலிவடக்கு காணி விடுவிப்பில்லை!

வலிவடக்கில் காணி விடுவிப்பு தடைப்பட இலங்கை ஜனாதிபதியின் நேரமின்மையே காரணமென யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுமெனவும் இலங்கை ஐனாதிபதியின் வருகை ரத்துசெய்யப்பட்டதால் அது காலதாமதமாகிவருவதாகவும்  யாழ்.மாவட்ட இலங்கை இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வலிவடக்கு பிரதேச செயலர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் யாரும் எதிர்பாரதவாறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. இதில் பலநூறு உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்பட்டன.
கடந்த மாதம் வலி வடக்கில் 25 ஏக்கர் ஐனாதிபதியினால் விடுவிக்கப்படவிருந்தது. அவரது வருகை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது காணி விடுவிப்பும் தள்ளி போடப்பட்டுள்ளது. எனினும் அடுத்த மாதம் காணிகள் விடுவிக்கப்படும் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி எனவும் தெரிவித்துள்ளார்.
Allgemein