பாஜகவின் ரகசிய திட்டம்! சமிக்கை கொடுத்த ரஜனி!

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதிமுக கூட்டணியும் தமிழகத்தல் படுதோல்வியடைந்துள்ளது , எனினும் மத்தியில் தனிப்பெருமப்பான்மை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது, தமிழக பாஜகவுக்கு வளமை போன்று ஏமாற்றங்களையும் கேலி கிண்டல்களையும் தாங்க வேண்டிய சூழலில் இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் இருந்தே தமிழகத்தில் தங்களின் ஆளுமையை பலப்படுத்த பாஜக முயற்சி எடுத்து வருகிறார்கள் ,பாஜக என்ற அடையாளத்தோடு தமிழகத்தில் நுழைவது கடினமாகத்தான் இருக்கிறது , இதற்காக கூட்டணிகளை அமைத்து தேர்தலில் நின்றபோதும் மக்கள் அங்கீகரிக்க தயாராக இருப்பதாக இல்லை மாறாக  அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களை நிராகரிப்பது நிதர்சனமாகியுள்ளது.

இந்நிலையில் தான் நீண்டகாலமாக நடிகர் ராஜனிகாந்தை தம் பக்கம் இழுப்பதற்கு படாதபாடு படுகின்றனர் பாஜக, அதற்கான காலம் கனிந்திருப்பதாக பல முக்கிய பாஜக உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.

அண்மையில் பாஜகவுக்கு மத்தியில் தனிப்பெரும் ஆட்சி அமைக்கும் அதிகாரம் கிடைத்ததிற்கு தமிழகத்தில் இருந்து மோடிக்கு முதல் வாழ்த்து தெரிவித்த நபர் நடிகர் ரஜனி என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிமீது தனிவிருப்ப அபிமானத்தை கொண்டுள்ள ரஜனி அதனை முக்கிய நேரங்களில் வெளிப்படுத்தவும் தவறுவதில்லை, மற்றும் அவரின் அரசியலும் கிட்டத்தட்ட பஜகவின் மத எண்ணங்களை பிரதிபலிக்கும் ஆன்மிக அரசியல் என்று அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

தமிழகத்தில் செல்வாக்கின்றி தவிக்கும் பாஜக வரும் சட்டசபை தேர்தலில் ரஜனி ,அதிமுக , பாஜக கூட்டணி திட்டத்தை வகுத்து  வைத்திருப்பதாக இரகசிய தகவல் ஒன்று ராஜனிக்கு பரிமாறப்பட்டிருப்பதாக தமிழக ஊடக நண்பர்கள் கூறுகின்ற்னர். கட்சி பணிகள் பூர்த்தியானதும் இதுபற்றி பேசலாம் என்று கூறியிருக்கிறாராம். எனினும் கூட்டணி திட்டத்துக்கு   மறுப்பு தெரிவிக்காததே தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பாஜகவினர் சந்தோசப்படுகின்றார், எது எப்படியிருந்தாலும் தாமரையை மலரச் செய்வதற்கு பாஜக படும் முனைப்போடு செயல்படுகிறது என்பது புலப்படுகிறது, எது எப்படியிருந்தாலும் பாஜகவின் கனவுத் திட்டத்துக்கு ரஜனி கரம்கொடுப்பது உறுதியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்தியச்செய்திகள்