மக்கள் தீர்ப்பு குறித்து ஆழமாக பேசும் நிலையில் நாம் இல்லை; ராகுல்!

தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது ,

„மோடிக்கும், பாஜகவுக்கும் வாழ்த்துகள். மக்கள் தங்களது முடிவை தெளிவாக தெரிவித்துள்ளார்கள். மக்களின் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை. நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று மக்கள் தேர்வு செய்துள்ளனர். ஒரு இந்தியனாக அதை நான் மதிக்கிறேன். அமேதியில் வெற்றி பெற்றுள்ள ஸ்மிருதி இராணிக்கு வாழ்த்துகள். இந்த தீர்ப்பு குறித்து ஆழமாக பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. இது பிரதமரை தேர்வு செய்துள்ள தினம். அதற்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும்“ என்றார்.

இந்தியச்செய்திகள்