முல்லைத்தீவில் அரச அதிகாரியை அச்சுறுத்திய சிங்களவர்!

முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறுவிளைவித்த கொக்குளாய் பகுதியினை சேர்ந்த சிங்களவர் ஒருவர் 22.05.19 அன்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.
கடந்த 15.05.19 அன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77 ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலகரை கொக்குளாய் பகுதியினை சேர்ந்த சிங்களவர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளதுடன் அவரின் உந்துருளியின் சாவியினை பறித்து அவர் சேட்டைப்பிடித்து இழுத்துள்ளார். இன்னிலையில் அன்றே இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
21.05.19 வரை முல்லைத்தீவு பொலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் கிராம சேவகர்களின் அழுத்தம் காரணமாக கிராமசேவகருக்கு இடையூறு அச்சுறுத்தல் விட்ட குறித்த சிங்கள இனத்தவரை 22.05.19 அன்று கைதுசெய்துள்ளார்கள்.
இன்னிலையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களை அழைத்த முல்லைத்தீவு பொலீசார் இருபகுதியினையும் சமாதானப்படுத்தும் முயற்சியில்  ஈடுபட்ட வேளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கிராம அலுவலகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்னிலையில் கைதுசெய்த குறித்த சிங்கள இனத்தவரை விடுவிக்க கோரி நேற்று கொக்குளாய் பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் பொலீஸ் நிலையம் சென்று கதைத்துள்ளார்கள்.
இருந்தும் பொலீசார் அரச உத்தியோகத்தருக்கு இடையூறு விளைவித்ததன் காரணத்தால் கைதுசெய்யப்பட்ட சிங்க நபரை 23.05.19 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் அரச உத்தியோகாத்தருக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் குறித்த நபரை எதிர்வரும் 03.06.19 வரை விளக்கமறியவில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொக்குளாய் முகத்துவராப்பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாகவே அங்க தமிழ் மக்கள் குடியேற இன்றும் அச்சப்பட்டு வருகின்றார்கள்.
இன்னிலையில் அரசு உத்தியோகத்தர் ஒருவருக்கே அச்சுறுத்தும் சிங்கள இனத்தவர்கள் மத்தியில் சாதாரண தமிழ்மக்கள் எவ்வாறு வாழ்வது என கொக்குளாய் பகுதியினை சேர்ந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்
தாயகச்செய்திகள்