27 மில்லியன் பவுண்ட் இணையம் மூலம் மோசடி!

பிரித்தானியாவில் கடந்த ஓராண்டில் மட்டும்   27 மில்லியன் பவுண்ட் (34.38 மில்லியன் டாலர்) மதிப்புள்ள இணையவழி பண மோசடிகள் நடந்ததாகத் நிதி தொடர்பான முறைகேடுகளைக் கண்காணிக்கும் ஆணையம் தகவல் வெளியிட்டது.

இந்த மோசடிகளினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆளுக்குச் சுமார் 14,600 பவுண்ட் இழந்ததாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலுக்கும் இவ்வாண்டு ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1,800 மோசடிச் சம்பவங்கள் நடந்துள்ளன. முந்திய ஆண்டுகளிலும் [பார்க்க அது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளனர்.

உலகச்செய்திகள்