எழுவர் விடுதலை; ஆளுநருக்கு நிறையும் தந்திகள்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுவரும் அப்பாவி தமிழர்கள் எழுவரையும் விடுக்ககோரி, தமிழக ஆளுநருக்கு  தந்திகள் அனுப்பும் போராட்டம் ஒன்று நடத்தப்படுகிறது
ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் அற்புதம் அம்மாவும் கலந்துகொண்டார். ஒரு இலட்ச்சம் தந்திகள் அனுப்பும் திட்டம் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை இதை மற்ற அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் முன்னெடுக்கவேண்டும் என்று குறிப்பிட்ட்னர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்புக்கு அமைய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையிலும், தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுனரிடம் வழங்கி 9 மாதங்கள் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியச்செய்திகள்