வற்றாப்பளை அம்மனுக்கும் பாதுகாப்பு?

முல்லைத்தீவு – வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த வைகாசி விசாக பொங்கல் விழா பாதுகாப்பு கெடுபிடிகள் மத்தியில் இன்று நடைபெற்றுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இம்முறை பொங்கல் விழாவில் பாதுகாப்பை பலப்படுத்துவது என காவல்துறை மற்றும் இராணுவம் களமிறங்கியிருந்தது.
வருடந்தோறும் நடைபெறுகின்ற வற்றாப்பளை அம்மன் ஆலயத்தினுடைய பொங்கல் நிகழ்வு இம்முறையும் நடைபெறுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுமிருந்தது.
Allgemein