யாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம் பளை பகுதியில் வெடிபொருட்களுடன் ஐவர் கைது

யாழ்ப்பாணம், பளை பகுதியில் வெடிபொருட்களை வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் பளை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் ஈடுபட்டனர் எனவும் இதன்போதே வெடிபொருட்களுடன் சந்தேகநபர்களை கைது செய்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து நாடளாவிய ரீதியில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபட்டு வருவதுடன் அதிகளவான வெடிபொருட்களையும் அவர்கள் கைப்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Allgemein