சவூதியில் இஸ்லாமிய புனிதத் தலமான மக்கா நோக்கி ஏவுகணை தாக்குதல்!

சவூதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புனிதத் தலமான மெக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் சவூதி அரசால் தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தயிப் மற்றும் ஜெட்டா பகுதிகளின் அருகே இந்த ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்காவை நோக்கி வந்த இரண்டு ஏவுகணைகளும் தகர்க்கப்பட்டாலும், மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் சவூதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ஏமன் நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு போரில் அந்நாட்டின் அரசுக்கு ஆதரவாகவும், ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகவும் சவூதி அரசு செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக ஹவுத்தி புரட்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் முஸ்லிம்கள் ரமலாம் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இந்த சூழலில் மெக்கா நோக்கி ஏவுகணை வீசப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகச்செய்திகள்