தொடர்கின்றது ஊடக கெடுபிடி?

ஊடகங்கள் மீதான கெடுபிடிகளை அரசு உச்சமாக கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ளது.இதன பிரகாரம் பறக்கும் படப்பிடிப்புக் கருவிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றினை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பதிவினை மேற்கௌ;ளுமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் அறிவித்தல் விடுத்துள்ளது.
மறுபுறம் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் ஒருதலைப்பட்சமாக செய்திகளை ஒளிபரப்பி வருகின்றதென தொலைக்காட்சி சேவையொன்றை தடை செய்ய முஸ்லீம் தரப்புக்கள் முனைப்புகாட்டிவருகின்றன.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் குறித்த தனியார் தொலைக்காட்சியின் பரிவர்த்தனைகளை தடை செய்யுமாறு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அனைத்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் செய்த முறைப்பாடுகளைத் தொடர்ந்தே முதல்வர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
Allgemein